மயிலாடுதுறையில் போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கமும் கெனான் நிறுவனமும் இணைந்து நடத்திய பயிற்சி
தமிழ்நாடு வீடியோ & போட்டோகிராபர்ஸ் அசோசியேசன் மாநில தலைவர் லயன் ஏ. சிவகுமார் வழிகாட்டுதலின்படி இன்று மயிலாடுதுறை மாவட்ட போட்டோ & வீடியோ ஔிப்பதிவாளர்கள் சங்கமும் கேனான் நிறுவனமும் இணைந்து பயிற்சியாளர் தனபால் தலைமையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந் நிகழ்வில் மாநில சங்கத்தின் சார்பாக 6ஆம் மண்டல செயலாளர் சரவணன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குமார் தலைமை ஏற்றார் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சுதாகர் பொருளாளர் ரமேஷ் அமைப்பாளர் வெற்றி நகரத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக நாகை மாவட்ட செயலாளர் செல்வகுமார் கலந்து கொண்டார் இந்த பயிற்சி வகுப்பில் மயிலாடுதுறை குத்தாலம் கொள்ளிடம் சீர்காழி பூம்புகார் பகுதி நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கு மேல் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நாகை மாவட்ட நிருபர் க. சக்கரவர்த்தி 97 88 34 18 34
No comments