காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தர வழக்கு போட்டவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்.....
8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது.நெல்லை மாவட்டம் வருசநாடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் அழகுமுருகன். அழகுமுருகனை கடந்த 2015ம் ஆண்டு முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன தனது கணவர் அழகுமுருகனை கண்டுபிடித்து தரக்கோரி கலாதேவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, 8 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக தற்போது வழக்கு தொடர்ந்திருப்பதில் மூகாந்திரம் இருப்பதாக கூறியதுடன், வழக்கு தொடுத்த கலாதேவிக்கு ரூ.10ஆயிரம் அபராதமாக விதித்து வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments