கரூரில் காலை உணவு திட்ட துவக்க விழாவில் முதல் நாளிலே உணவு சரியில்லாததால், மாணவர்கள் சாப்பிட்ட உணவுகளை மிச்சம் வைத்து விட்டு சென்றனர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் உள்ள பள்ளி காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.
கரூர், பெரியகுளத்துப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், கரூர் எம்.பி ஜோதிமணி, மேயர் கவிதா கணேசன் என பலர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தனர்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரவா கிச்சடி சாம்பார் மற்றும் ரவா கேசரி ஆகிய உணவுகள் வழங்கப்பட்டன இதில் பள்ளி குழந்தைகள் சிலர் உணவு சரியில்லாததால் முழுவதுமாக சாப்பிடாமல் உணவுகளை தட்டிலேயே அப்படியே வைத்துவிட்டு சென்றனர். சில குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்றனர். தொடர்ந்து சாப்பிட்ட மாநகராட்சி ஊழியர்கள் கிச்சடி மற்றும் கேசரி ஆகியவை நன்றாக இல்லை என பலர் புலம்பிச் சென்றனர்.
முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், திமுக நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் என பலரும் நிழலில் அமர பள்ளி குழந்தைகளை வெயிலில் அமர வைக்கப்பட்ட அவல நிலை என்பது குறிப்பிடப்பட்டது.
கரூர் மாவட்டம் நிருபர்
மோகன் ராஜ்
No comments