• Breaking News

    கிடுகிடுவென்று உயர்ந்த பூக்கள் விலை...... ஒரு மணி நேரத்தில் அனைத்து பூக்களும் விற்று தீர்ந்தன.....


    கரூர் ரயில்நிலையம் அருகே உள்ள மாரியம்மன் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை, முல்லை, ரோஜாப்பூ, தாழம்பு, தாமரை, செவ்வருளி, சம்பங்கி, செவ்வந்தி., விருட்சிப்பூ உள்ளிட்ட பூக்கள் விதவிதமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலைவிக்கப்பட்ட பூ விவசாயிகள் அறுவடை செய்யப்பட்டு பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் அனைத்து பூக்களும் மளமளவென்று விற்று தீர்ந்தது. வரலெட்சுமி நோன்பு மற்றும் வெள்ளிக்கிழமையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென்று உயர்ந்த நிலையில், மல்லிகை ஒரு கிலோ ரூ 800 க்கு விற்ற நிலையில், இன்று ரூ 900 முதல் ரூ 950 க்கு விற்பனையானது. முல்லைப்பூக்கள் விலை ரூ 350 க்கு விற்ற நிலையில், இன்று மட்டும் ஒரு கிலோ ரூ 450 முதல் 500 க்கு விற்பனையானது. மதே போல், அரளி ரூ 250 க்கும், கிடுகிடுவென்று உயர்ந்தது. கடந்த ஒரு மாத காலமாக, ஆடி மாதம் என்பதினாலும், முகூர்த்தங்கள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது ஆவணி மாதம் பிறந்து ஒரு சில சுபமுகூர்த்தங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வரலெட்சுமி நோன்பினை முன்னிட்டு திடீரென்று விலை உயர்ந்த பூக்களின் விலை உயர்வினால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியும், மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.


    கரூர் மாவட்டம் நிருபர் 

    மோகன் ராஜ்

    No comments