திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் - MAKKAL NERAM

Breaking

Saturday, August 26, 2023

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்வி நிறுவனத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று,செண்டை மேளம் முழங்க அத்தப்பூ கோலமிட்டு துவங்கிய விழாவில் கல்லூரியின் தாளாளர்  சீனிவாசன், செயல் இயக்குநர் கவிதா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி  நிறுவனங்களின் முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகளும் மலையாள பராம்பரிய உடை அணிந்து ஒன்றாக திரண்டு கொண்டாடினர். மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். 

கல்வி நிறுவனங்களின் முதன்மை பொறுப்பாளர்  கே.தியாகராஜா அவர்கள், செயல் அதிகாரி முனைவர் அகிலா முத்துராமலிங்கம் அவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் மோகன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். பிற கல்லூரி முதல்வர்களும் வாழ்த்தினர். இவ்விழாவில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலையாள பாரம்பரிய உணவும் வழங்கி ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment