நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். இன்ஸ்டிடியூட் பார் என்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரியில் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்கள் வேலைவாய்ப்பினை எளிதாக பெரும்போது கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவதற்கான சரியான பயிற்சி இல்லாததால் வேலைவாய்ப்பு பெற முடியாத சூழ்நிலை உருவாகி வரும் நிலையில் கிராமப்புற மாணவர்களின் வேலை வாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமினை சீடு (Skill Enhancement Employability Development Fouum)SEED என்ற பெயரில் நடத்த உள்ளனர்,பயிற்சி முகாமின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள பிளாட்டினம் அரங்கில் நடந்தது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலர் தியாகராஜா, இயக்குனர் மோகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள், சீடு அமைப்பைக் குறித்து அமைப்பின் மனித வள மேம்பாட்டுக் குழுவை சேர்ந்த சண்முகம் எடுத்துக் கூறினார் அமைப்பின் உறுப்பினர்களை சீடு நிர்வாகிகளில் ஒருவரான ஞான தேசிகன் அறிமுகப் படுத்தி வைத்தார். அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அருணா பெருமாள் பேசினார்.
ஜெ.ஜெயக்குமார் திருச்செங்கோடு
No comments:
Post a Comment