நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் பண்டிகை காலங்களில் காப்பு கட்டி கம்பம் திருவிழா முடிந்ததும் கம்பத்தை எடுத்து விடுவார்கள்.
ஆனால் ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் வருடம் முழுவதும் கம்பம் நடப்பட்டிருக்கும் சிறப்பு பெற்றிருக்கிறது. இதனால் இந்த அன்னை ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் என அழைக்கப்படுகிறார்.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆடி மாதத்தில் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் அருள் பாலித்து வருகிறார். அதன்படி இன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அன்ன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆறாம் ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
அலங்காரம் செய்யப்பட்ட இந்த அன்னத்தில் தயிர் சாதம் செய்து பக்தர்களுக்கு நாளை வழங்கப்படும் இந்த தயிர் சாதத்தை உண்ணும் பெண்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்பதும், திருமணம் ஆகாதவர்கள் உண்ணும் போது திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
எனவே தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசைகள் நின்று இன்று அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
மேலும் பக்தர்கள் அனைவருக்கும் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்

0 Comments