• Breaking News

    கம்பத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



    தேனி மாவட்டம் கம்பத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஹரியானாவில் கலவரம் மற்றும் இமாம் படுகொலை செய்யப்பட்டது கண்டித்தும் ஜெய்ப்பூர் ரயிலில் முஸ்லிம்களை தேடி தேடி சுட்டு படுகொலை செய்த சேத்தன் சிங்-யை தூக்கில் போட கூறியும், மணிப்பூரில் நடந்த கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், முஸ்லிம்கள் கிறுஸ்தவர்களை அவதூறாக பேசிய சீமானின் பேச்சை கண்டித்தும்..

    மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது தலைமையில் நடைபெற்றது .

    நகர செயலாளர் சாகுல் அவர்கள் தொகுத்து வழங்கினார்..


    இந்திய உலமா பிரண்ட் பொறுப்பாளர் சாகுல் ஹமீது பாக்கவி,மாவட்ட பொருளாளர் சிட்டி சாகுல், மாவட்ட துணை தலைவர் அபுதாகிர் மாவட்ட துணை செயலாளர் ரஹிம் மற்றும் கம்பம் நகர நிர்வாகிகள் ஜாபர், அஜிஸ் மூஸில் ஹாதி, முஜிபுர் ரகுமான், இஸ்ஹாக் சகோதரர் அஜ்மல் கான், சாதிக், சிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..


    மாவட்ட செயலாளர் முபாரக் அலி, தேவதானப்பட்டி நகர தலைவர் அலி ஆகியோர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்..


    IUML மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது அவர்கள்,காங்கிரஸ் கட்சியின் கம்பம் ஒன்றிய தலைவர் ராஜா முகமது, INLP மாநில துணை தலைவர் கம்பம் சாதிக், INTJ கம்பம் நகர நிர்வாகி கபீர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.


    கண்டன உரையாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர் அரபாத், மாநில பொதுச்செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.



    இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக, காங்கிரஸ், தமுமுக, மமக, மஜக,SDPI IUML, INLP, IMMK கிறிஸ்தவ அமைப்புகள், கம்பம் நகர்மன்ற உறுப்பினர்கள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


    ஆண்கள் பெண்கள் என திராளாக கலந்து கொண்டு பாசிச கயவர்களுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

    No comments