• Breaking News

    இண்டியம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது


     ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இண்டியம்பாளையம் ஊராட்சியில் அரசூர் புதூர் பொன்னாங்கடை முதல் கண்ணப்பன் வீடுவரையிலும், ராஜேந்திரன் கோழி கடை முதல் பழனிச்சாமி வீடு வரையிலும், ராஜவீதி ரோடு முதல் கணேஷ் வீடுவரையிலும், பெருமாள் வீடு முதல் ஆசிரியர் விஜயகுமார் வீடு வரையிலும்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ். ரூ.15.52 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்க சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக  ஒன்றிய செயலாளர்      கே.சி.பி. இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.  மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்       ராஜம்மாள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். விஸ்வநாதன், இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். செந்தில்,               ஊராட்சி மன்ற துணை தலைவர்  உமா மகேஸ்வரி,               சிஎம்எஸ் தலைவர்             விசி. வரதராஜ்,  மாக்கினாங்கோம்பை  ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன்,  திமுக நிர்வாகி  டி. ஆர். சசிகுமார்,  அரசூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே. பி. சரவணகுமார், கிளைச் செயலாளர்கள், தங்கவேல், மூர்த்தி, நாகேந்திரன், சாமிநாதன்,   ஜீவா பெருமாள்,  பி. ரவி, தேவராஜ், ஒப்பந்ததாரர் ரமேஷ், மற்றும் ஊர் பொதுமக்கள், திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments