கரூரில் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அலுவலகம், தனலட்சுமி மார்பிள்ஸ் டைல்ஸ் ஷோரூம் மற்றும் உரிமையாளர் பிரகாஷ் வீடு, லக்கி டிரேடர்ஸ் டையிங் யூனிட் நிறுவன அலுவலகம் என கடந்த இரண்டு நாட்கள் மொத்தம் 5 இடங்களில் சோதனையை நடத்திய அதிகாரிகள் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் புறப்பட்டுச் சென்றனர். மத்திய துணை ராணுவ படை பாதுகாப்பும் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டது.
கரூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
கரூர் மோகன் ராஜ்
No comments:
Post a Comment