• Breaking News

    BSNL அலுவலகத்தில் காப்பர் கம்பிகளை திருடிய இளைஞர்கள் 4 பேர் கைது.....


    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டி பேரூராட்சி கிளையில் உள்ள BSNL  அலுவலகத்தில் சுமார் 21 மீட்டர் நீளமுள்ள காப்பர் கம்பிகளை மூட்டை உடைத்து  திருடிய இராசிபுரம் பகுதியை சேர்ந்த  பிரவீன்பிரபு (28), ரவிக்குமார்(23), சஞ்சய் (24), பைரோஸ் (19) நாமகிரிப்பேட்டை போலீசார்  கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இதில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த மணிகண்டன் தலைமறைவு. 

    புதுப்பட்டி பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர் ஜெயந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை  

    புதுப்பட்டி பகுதியில் தொலைபேசி இணைப்பு துண்டாகி உள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு லைன் மேனாக பணிபுரியும் தங்கவேல் என்பவர் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது இருப்பு ஹட்டர் உடைக்கப்பட்டு உள்ளே ஐந்து பேர் கம்பிகளை திருடி கொண்டிருந்தது தெரியவந்தது.  லைன் மேன் கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து கம்பிகளுடன் தப்பி இரண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடி உள்ளனர்.

    இந்நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளநிலை பொறியாளர் ஜெயந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    முக்கிய குற்றவாளி என மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார்.

    மேலும் அவர்கள் கம்பிகளை எடைக்கு போட்ட பழைய இரும்பு கடையில் இருந்து கம்பிகள் மீட்கப்பட்டது. 

    ராசிபுரம்  பகுதி சுற்றி  ஐந்துக்கும் மேற்பட்ட BSNL   அலுவலகங்களில் இதுபோல் கம்பிகள் திருடு போயுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் திருட்டு சம்பவத்தில் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் அமைக்கபட்ட தனிப்படை நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

    No comments