ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த பிரபல பெண் நடனக் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியை சேர்ந்த ஹிமா (25) என்ற நடனக் கலைஞருக்கு திருமணம் ஆகி கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 7 வயதில் மகள் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடனக் கலைஞரான கணேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 10ம் தேதி பெங்களூரு பகுதியில் நடன நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் நண்பர்களுடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். 8 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 10 பேர் விடுதியில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் ஹிமா விடுதி அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஹிமாவுடன் வந்திருந்த நடனக் கலைஞர்களிடம் விசாரணை நடத்தினர். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஏலகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment