திருநங்கையருக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் துவக்கம்


திருச்செங்கோடு நகராட்சி மற்றும் திருச்சி கோரோட் அறக்கட்டளை சார்பில் 'அவனுள் அவன்' திருநங்கையருக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் உளவியல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நெசவாளர் காலனி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு  நகர்மன்றத் தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு அவர்கள், திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் அவர்கள்,  திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்   R.நடேசன் அவர்கள், திமுக மேற்கு மாவட்ட  வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர். அவர்களுடன்,தமிழ்நாடு திருநங்கையர்  நலவாரிய குழு உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட திருநங்கையர் அமைப்பு தலைவி டாக்டர். அருணா நாயக், அறக்கட்டளை அறங்காவலர் பத்மாவதி நிகழ்ச்சியில்  நகர்மன்ற உறுப்பினர்கள் W.T.ராஜா,  ரமேஷ், அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


ஜெ.ஜெயக்குமார் 9942512340 

நாமக்கல் மாவட்டம்


Post a Comment

0 Comments