ஜவான் படத்தின் வெற்றியில் மூழ்கி இருக்கும் நயன்தாரா மும்பையில் நடந்த முகேஷ் அம்பானியின் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்தில் கொண்டாட்டத்தை நடத்தினர்.
அப்போது, முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த விழாவில் நயன்தாரா தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் சென்றிருந்த நிலையில், அட்லி தனது மனைவி பிரியாவுடன் கலந்து கொண்டார். முக்கியமாக, இந்த விழாவுக்கு ஷாருக்கானும் தனது குடும்பத்தினருடன் வந்தார். பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரும் கொண்டாட்டங்களில் காணப்பட்டனர்.
அவர்களைத் தவிர, விக்கி கௌஷல், ஆயுஷ்மான் குரானா, அதியா ஷெட்டி, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், ஜூஹி சாவ்லா மற்றும் பிற பி-டவுன் பிரபலங்கள் வருகை தந்து, இந்த நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடினர்.
நயன்தாரா வெள்ளை நிற குர்தா தனது கணவருடன் வெள்ளை நிற உடையிலும், இயக்குனர் அட்லீ வெளிர் நீல நிற குட்டையான ஷெர்வானி மற்றும் வெள்ளை நிற பேண்ட்டிலும், அவரது மனைவி பிரியா பிரகாசமான அழகாகவும் காணப்பட்டனர் .
No comments:
Post a Comment