நாகை: வாரந்தோறும் நடக்கும் குறைதீர் நாள் கூட்டம் எஸ்.பி பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 20, 2023

நாகை: வாரந்தோறும் நடக்கும் குறைதீர் நாள் கூட்டம் எஸ்.பி பங்கேற்பு

 


நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்  பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 10 மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க உங்கள் எஸ்.பி யுடன் பேசுங்கள்: 8428103040 என்ற தொலைபேசி எண் மூலம் கள்ள சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ் சிங் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க

No comments:

Post a Comment