ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 20, 2023

ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து

 


சென்னையில் உள்ள மேடவாக்கத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாக்கம் பகுதியைச்சேர்ந்த டிப்ளமோ படிக்கும் 16 வயதான கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரிக்கு செல்லப் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார்.அப்போது, வசந்த் என்ற இளைஞன் யாரும் இல்லாத நேரத்தை அறிந்து, அந்த மாணவியின் தலை, தொடை, கைவிரல் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, காயமடைந்த மாணவி முதலில் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில், ஒரு தலை காதலால் கத்தி குத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூடுதல் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment