க.பரமத்தி அருகே லாரி மீது இரண்டு சக்கர மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பலி...... மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 19, 2023

க.பரமத்தி அருகே லாரி மீது இரண்டு சக்கர மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பலி...... மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.....


கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த காஜா மெய்னுதீன் வயது 18, ஹாஜி அஹமது வயது 20 இரண்டு கல்லூரி மாணவர்கள் மூன்று நாட்கள் விடுமுறை  முடிந்து கோவையில் உள்ள கல்லூரிக்கு க.பரமத்தி வழியாக  சென்று கொண்டிருந்தபோது, அதிகாலையில் க.பரமத்தி அருகே அரியலூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதி காஜா மொய்னுதின் (18) சம்பவ இடத்தில் பலி மற்றொரு மாணவன் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த காஜா மெய்னுதீன் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் மாவட்ட செய்தியாளர்,

மோகன் ராஜ்

93857 82554

No comments:

Post a Comment