• Breaking News

    100 வருட பாரம்பரியம் பஞ்சரானது..... தரமின்மையால் தொழிலை இழக்கும் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ்

     


    பேருதான் பெத்த பேரு என்று கிராமத்தில் சொல்வார்கள். அந்த வகையில் 100 வருட பாரம்பரிய சுவீட்ஸ் நிறுவனம் என்று விளம்பரபடுத்தி தொழிலை நடத்தி வருகின்றை பி.ஜி.நாயுடு நிறுவனம்.

    ஒன்றிரண்டை தவிர எந்த சுவீட்ட எடுத்தாலும் பிழிந்து எண்ணையை எடுக்கலாம்.நெய் எல்லாம் சும்மா.


    அந் நிறுவனத்தில் பெரியோர்கள் கொண்டு வந்து சேர்த்திருந்த பெயரையும் தரத்தினையும்  வாரிசுகள் அழித்துவிட்டனர்.


    கிளைகள் அதிகமாக இருந்தாலும் ஒன்றிரண்டு கடைகளை தவிர மற்றவை எல்லாவற்றிலும் காற்று ஜம்மென்று வரும் என்பதே உண்மை.


    பி.ஜி.நாயுடு சுவீட்ஸ் க்கு சென்னை உள்ள்ட்ட வெளி மாட்டத்திலும்  கஷ்டமர்கள் உண்டு என்பது மறுக்க இயலாது.


    ஆனால் ரெண்டு நாள் முன்னர் திருச்சி கஷ்டமர் ஒருவர் ஆர்டர் கொடுத்து வாங்கிய சுவீட்ல தான் நூல்கள் வந்துட்டே இருந்தாலும்,பல நாட்களுக்கு முன்பு போட்ட சுவீட் என்பதாலும் வாடிக்கையாளர் அதிர்ச்சியாகிட்டார்.


    பழைய சுவீட்ட அனுப்பி வாடிக்கையாளரை பதற  வைத்த மூலம் பி.ஜி.நாயுடு நிறுவனத்தின் பாரம்பரியம் என்ற பம்மாத்து பஞ்சாராயிட்டதாம்.


    இதில் வேடிக்கை என்றால் ஏழைகள்.தவறு செய்தால் கடைகளை இழுத்து மூடி விளம்பரபடுத்தி கொள்ளும் உணவு பாதுகாப்பு பிரிவினர் பி.ஜி.நாயுடு. நிறுவனத்த மூட கூட முயற்சிக்காமல் 3000 ரூபாய் மட்டும் அபராதம் மட்டுமே போட்டுள்ளனர்.


    இதன் மூலம் உணவு பாதுகாப்பு துறையினரின் நேர்மை பல்லை காட்டியுள்ளது.

    எது எப்படியோ இனியாவது பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனம் பந்தா பகட்டு  விளம்பரங்களை ஓரம் கட்டி விட்டு பெரியோர்கள் பாடுபட்டு உருவாக்கிய இனிப்பு மற்றும் காரவைகளில் தரத்தினை உருவாக்குவதையே குறிக்கோளாக கொண்டு அதனை செயல்படுத்தி மீண்டும் மக்களிடம் பாரம்பரியத்தினை நிரூபிக்க முன் வரவேண்டும்.

    குறிப்பா ஸ்வீட்ஸ்ல எண்ணை ஓரம் கட்டி கொஞ்சமாவது நெய்யில் உருவாக்கிட வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்.

    பொறுத்திருந்து பார்ப்போம் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸின் கவனம் தரத்திலா? -எப்போதும் போல பகட்டிலா......

    No comments