காலம் மாறி போச்சு...... 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..... 55 வயது பெண் கைது...... - MAKKAL NERAM

Breaking

Thursday, October 26, 2023

காலம் மாறி போச்சு...... 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..... 55 வயது பெண் கைது......

 


தஞ்சாவூரில் 55 வயது பெண்மணி 15 வயதான சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம், சோழன்மாளிகை பகுதியை சேர்ந்த வீரசோழன். இவரது மனைவி சூர்யகலா(வயது 55). இவரும் கும்பகோணம் பேட்டை ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முருகனும்(52) நண்பர்கள். இந்த நிலையில் அதேப்பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுவனுக்கு, சூர்யகலா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு முருகன் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.




இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தான். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யகலா, முருகன் ஆகிய 2 இருவரையும் கைது செய்தனர்.


கும்பகோணத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment