இன்றைய ராசிபலன் 18-10-2023
மேஷம் ராசிபலன்
நீங்கள் உங்களது அனைத்து துன்பங்களை பகிர்ந்துகொள்ளவும், துயரங்களையும் யாரிடமாவது கொட்டித் தீர்ப்பதற்கும் ஒரு நபரை தேடலாம். உங்களது கவனம் தேவைப்படும் அதிமுக்கியத்துவமான விஷயங்கள் இருக்கும் போது, தேவையற்ற விஷயங்களை அறிய முற்படாமல் கவனமாக இருங்கள். நேர்மறையான சிந்தனைகள் உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறுவதற்கு நீண்டநேரம் ஆகலாம். இதனால், நீங்கள் சதாகாலமும் சிந்தித்துக் கொண்டேயிருக்கும் நிலையிருந்து மீண்டு பயனடையலாம். ஆரோக்கியமான உணவைப் பற்றி படித்தால் மட்டும் போதாது, மாறாக நீங்கள் அதைப் பின்பற்றவும் வேண்டும். இன்று முதல் ஒரு சரியான திசையினை நோக்கி பயணப்படுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
இந்த நாள் உங்களுக்கு பிரகாசமாக உள்ளது, தொழில் மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் கலையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வேலை விஷயங்களை வீட்டிற்குக் கொண்டு வருவதால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் போதுமான நேரத்தைச் செலவிட உங்களால் முடியாமல் போகலாம், உங்களது சகாக்களினால் உண்டாகும் அழுத்தம் உங்கள் வாழ்க்கையில் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வருகிறது. இன்றைய நாளில் நீங்கள் சொல்லும் "இல்லை" என்ற சொல்லை உறுதியாகச் சொல்ல வேண்டும்.
மிதுனம் ராசிபலன்
நீங்கள் கூடுதலாக சிலதூரம் பயனித்துள்ளீர்கள். மேலும், இதுவரை நீங்கள் செய்த அனைத்து செயல்களிலும் நூறு சதவீதம் (100%) முயற்சியினை செய்துள்ளீர்கள். உங்கள் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்ததால், நீங்கள் உங்களை மிகவும் வருத்திக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் நேர்மறை சிந்தனையோடும், ஊக்கத்தோடும் உணர்கிறீர்கள் என்றால், அதைப்பற்றி பேசுவதற்குப் பதிலாக, அது உங்கள் செயலில் பிரதிபலிக்கட்டும். நீங்கள் மனதில் இருக்கும் புதிய திட்டங்களுக்கு குறைகூறுவோரும், எதிர்மறை சிந்தனை உள்ளவர்களும் எவ்வாறு வினையாற்றுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நேர்மறை ஆற்றலோடு உங்கள் வழியை தேர்வு செய்யுங்கள்.
கடகம் ராசிபலன்
இந்த நாள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. இதைப் போக்க அனுபவம் வாய்ந்தவர்களுடன் பேசுங்கள் அல்லது நண்பர்கள் மீது நம்பிக்கை வைப்பது உங்கள் கவலையைப் போக்க உதவும். உங்களது அளப்பரிய ஆற்றலை சில நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட உங்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரும். சுறுசுறுப்பாக இருப்பது, உங்களைப் பற்றி நீங்களே நன்றாக உணர வைக்கும். வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் ராசிபலன்
உங்கள் மந்தமான நாட்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். உண்மையில் நீங்கள் சில பாராட்டுகளுக்காக ஏங்கலாம். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட சுய மதிப்பீடு மிகவும் முக்கியமானது. உங்கள் கலை திறமைகளை இன்று வெளிப்படுத்துங்கள். இது சக ஊழியர்களிடம், உங்களைத் தனியாகக் காட்டி விடும். உங்கள் கவனங்கள் அனைத்தையும் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் நண்பர்களால் உங்களுக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படும் என்றாலும், அவர்களைக் கண்மூடித்தனமாக நம்புவது நல்ல நடவடிக்கை அல்ல.
கன்னி ராசிபலன்
பொறுப்பை கண்டு பயந்து ஓடுவது சிறந்ததாக இருக்காது. நீங்கள் மேலும் முன்னேற உங்களுக்கு உண்டாகும் பயத்தை எதிர்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் அன்பைத் தேடுகிறீர்கள். இந்த நாளில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் எச்சரிக்கையாக இருங்கள். அதற்கான நேரமும், சக்தியும் உங்களிடம் உள்ளதா? ஆபத்தான ஒப்பந்தத்தில் பங்கேற்பது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் பங்கேற்க விருப்பமில்லை என்பதை வெண்ணெய்யைக் கத்தியால் வெட்டுவது போன்று உறுதியாகச் சொல்ல வேண்டும். நீங்கள் மறுப்பது யாரையும் காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துலாம் ராசிபலன்
உங்கள் மனதில் பட்டாம்பூச்சி பறக்கிறதா? மோகம் உங்களைத் தாக்கலாம், ஆனாலும், உங்களை பற்றிய அறிவார்ந்த முறையில் சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு வயதாகி வருவதை நீங்கள் காண்கிறீர்களா அல்லது உங்கள் தோல் சுருங்கி விட்டதா? மனதில் தோன்றுவதை வாங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், சிக்கல் இல்லாத வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டால், நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.
விருச்சிகம் ராசிபலன்
மனஅழுத்தமானது உங்களது உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள செரிமான பிரச்சினைகள் மோசமான உணவுப் பழக்கத்தினால் எற்பட்டதல்ல. மாறாக, உங்களது மன அழுத்ததினால் ஏற்பட்டதாகும். உங்களுக்கு ஒரு கடினமான நேரத்தை அளிக்க விரும்பும் ஒரு சில நபர்கள் உள்ளனர். நீங்கள் கோவப்படுவதாக உணரும் போது, சிறிது நேரத்திற்கு அந்த இடத்தை விட்டு அகன்று, உங்கள் சொந்த நலனுக்காக வேறு ஏதாவது ஒன்றை நினைத்துப் பாருங்கள். நிறைய விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளன. உங்களது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை விஷயைங்களை புறந்தள்ளுங்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வழியில் வந்து கொண்டிருகின்றன.
தனுசு ராசிபலன்
குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள் போன்றோர் உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் பொறுப்புகள் அல்லது கவலைகளைப் பகிர்ந்து கொண்டு இன்று உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். குறைவாகக் கவலைகொண்டு, அதிக நேரம் தியானம் செய்யுங்கள். மக்கள் உங்கள் மீது காட்டும் அன்புக்காக அவர்களைப் பாராட்டுங்கள். இன்று உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். இது நீங்கள் நினைப்பதை விட, உங்களுக்கு அதிகமாக தேவைப்படும்.
மகரம் ராசிபலன்
நீங்கள் இப்போது மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறீர்கள். இது உங்களுக்கு தெரியாமல் உங்களை மெதுவாக செயல்பட வைக்கிறது. இதனால், நீங்கள், உங்கள் விருப்பத்தையும், செயல்பாட்டையும் இழந்து விடாதீர்கள். ஒருவேளை இது நீங்கள் இதுவரை திட்டமிட்டு வைத்திருந்த பணிக்கான நேரமாக இருக்கலாம். நீங்கள் மென்மேலும் முயற்சிசெய்து, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த முயலுங்கள். இன்று, இது உங்களை நல்ல முறையில் வழி நடத்தும்.
கும்பம் ராசிபலன்
விஷயங்கள் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், நடைமுறையில், நீங்கள் கட்டுப்பாட்டோடு இருக்கும் முயற்சியில் செயலற்றுவிட்டதாக உணர்கிறீர்கள். ஆனாலும், இத்தகைய குறுகிய காலகட்டத்தில், இது போன்ற விஷயங்களை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிறைவேற்ற வேண்டும்! இது உங்கள் ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். நாட்கள் கடக்கையில், உங்களது சமூகம் சார்ந்த மனப்பாங்கினை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த கடினமான காலங்களில், உங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் சிறந்த பிரதிபலனை அளித்து, அன்பு கூருங்கள்.
மீனம் ராசிபலன்
இன்று, நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு புதிய சிந்தனைகளையும், நுண்ணறிவு திறத்தினையும் தரும். அவற்றை இழக்காதீர்கள்! உங்களது திறமைகளை பட்டைதீட்டக்கூடிய கற்றல் வாய்ப்புகளுக்காக நீங்கள் இன்னும் தயாராக இருப்பீர்கள். இன்று, சில குறுகியகால பயணங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அற்பத்தனமான விஷயங்களில் கவனம் செலுத்தும் மனப்போக்கு உங்களிடத்தில் உள்ளது. எனவே, முக்கியமான விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள். ஏனெனில், இது உங்களுக்கு ஒரு வளமான அனுபவமாக இருக்கும்.
No comments