• Breaking News

    ஏர்வைக்காடு -திருவாரூக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம்


    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள ஏர்வைக்காடு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருவாரூருக்கு அரசு பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி ஏர்வைக்காடு கிராமத்தில் இருந்து திருவாரூர் வழித்தடத்தில் அரசு  பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கிஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன்,கீழ்வேளுர் சட்ட பேரவை உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக கிராம மக்கள் சார்பில் பேருந்துக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்) நாகப்பட்டினம் மண்டலத்தின் மூலம்  இயக்கப்படும் இந்த பேருந்தானது தினசரி ஏர்வைக்காடு கிராமத்தில் இருந்து காலை 6.45 மணிக்கும் திருவாரூர் பேருந்து நிலையில் இருந்து மாலை 5.00 மணிக்கும் இயங்கும்‌‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில்திருக்குவளை கல்வி வளர்ச்சிக் கட்டளை குழுத் தலைவர்  சோ.பா.மலர்வண்ணன், ஊராட்சி தலைவர் கே.எஸ்.தனபாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் டி.செல்வம், கும்பகோணம் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் கே. இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) மூ.சிதம்பரக்குமார், கிளை மேலாளர் திருவாரூர் எஸ். அசோகன், சமூக ஆர்வலர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    No comments