கரூரில் உலக மனநல விழிப்புணர்வு பேரணி - MAKKAL NERAM

Breaking

Thursday, October 12, 2023

கரூரில் உலக மனநல விழிப்புணர்வு பேரணி


கரூர் மாவட்டத்தில் கொங்கு திருமண மண்டபம் கோவை சாலையில் சக்தி நர்சிங் கல்லூரி , ஆத்மா மருத்துவமனை இணைந்து உலக மனநல விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  பேரணையை.அள்ளி சிதம்பரம்.கல்லூரி தாளாளர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

செவிலியர் பயிற்சி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் மனநோய் மூளையில் ஏற்படும் சில ரசாயன கடத்தகளின் அளவு விகிதம் குறைவதாலும் அதிகமாகதாலும் ஏற்படுகின்ற மனநோய் .

ஒரு மூலையில் இருந்து தோன்றும் நோய்தான் பிறர் உடல் உபாதைகளுக்கு மருத்துவம் அளிப்பது போல் மன நோய்களும் மருத்துவ சிகிச்சையினால் குணப்படுத்தலாம் மனசோர்வு நோய் குணப்படுத்தக் கூடியது.மன அழுத்தத்தால் பல்வேறு உடல் நோய்கள் தோன்றும்.என்று துண்டு பிரச்சாரங்களை பொதுமக்களுக்கு வழங்கிவிழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இப்பேரணி கோவை சாலையில்  தொடங்கி கரூர் முக்கிய பிரதான சாலை வழியாக கரூர் பேருந்து நிலையம். ஜவகர் பஜார் .கரூர் தலைமை தபால் நிலையம் வரை சென்று முடிவடைந்தது.இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


கரூர் மாவட்ட செய்தியாளர்

மோகன் ராஜ்

93857-82554

No comments:

Post a Comment