திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் கடை வியாபாரிகளை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணை ஆணையர் கல்யாணி யை கண்டித்து 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும்,கடை மற்றும் வீடுகளில் முன்பு கருப்புக்கொடி ஏற்றியும் சமயபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்கள் மற்றும் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு பொதுமக்களும் , அனைத்து அரசியல் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ளூர் மக்களும், உள்ளூர் கடை வியாபாரிகளும் கட்டணமின்றி அம்மனை தரிசனம் செய்து வழிபட்ட நிலையில் உள்ளூர் மக்களை கட்டணமின்றி தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணை ஆணையரைக் கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment