நாகை மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட குருவை நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வடக்கு ஒன்றிய செயலாளர் என் எம் அபூபக்கர் தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் முத்தையன் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் வி .மாரிமுத்து பேசினார்.
கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் எம் என் அம்பிகாபதி ஏ சிவக்குமார் எஸ் பாண்டியன் டீ துரைராஜ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே வி மாரிமுத்து ஜே நாகராஜன் எஸ் சத்தியவாணன் பி ராஜா ஆர் இளையராஜா தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏ சந்திரசேகரன் என் மதியழகன் வி. அண்ணாதுரை மற்றும் கட்சியின் கிளை செயலாளர் வர்க்க வெகுஜன அரங்க பொறுப்பாளர்கள் கிளை தோழர்கள் பங்கேற்றனர்.
மக்கள் நேரம் செய்திக்காக நாகை மாவட்டத்தில் இருந்து சக்கரவர்த்தி
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment