செங்கம் நகரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் நகரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கே.எஸ்.அழகிரி அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா செங்கம் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக செங்கம் காக் கண்ணா விநாயகர் கோவிலில் சிறப்பு தரிசனம், செங்கம் மில்லத் நகரில் தர்காவில் இஸ்லாம் முறைப்படி தொழுகை நடைபெற்றது.
கிறிஸ்துவ முறைப்படி செங்கம் பெந்தகோஸ் திருச்சபையில் ஜெபம் நடைபெற்றது. ஜெபம் முடிந்த பிறகு கே.எஸ்.அழகிரி பெயரில் கேக்குகளை வெட்டியும் பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செங்கம் G.குமார் தலைமையில் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பெயரில் சிறப்பு ஜெபம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்.k மோகன் புதுப்பட்டு ராஜி, தமிழ் ஆசிரியர் ஐயா மாணிக்கம் ,வட்டாரத் தலைவர் ரத்தினம் ,மாரி, வழக்கறிஞர் அறிவழி பாபு, நேரு, நகரத்தலைவர் காந்தி, சஞ்சீவ் , சுப்பிரமணி, ஆனந்தபாபு வெங்கடேசன், ராமநாதன் ,மற்றும் தலைவர்களும் ஏராளமான உறுப்பினர்களும் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
No comments