கொமாரபாளையம் ஊராட்சி பகுதியில் மயானம் அமைக்கும் பணி தொடர்பாக சத்தி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நேரில் ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Thursday, October 12, 2023

கொமாரபாளையம் ஊராட்சி பகுதியில் மயானம் அமைக்கும் பணி தொடர்பாக சத்தி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நேரில் ஆய்வு


ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொமராபாளையம் ஊராட்சி,  நஞ்சப்ப செட்டி புதூர்  அரிஜன காலனியில் மயானம் அமைக்கும் பணி தொடர்பாக  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் ,  சத்தி தெற்கு  திமுக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ  அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களை நேரில் அழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவர்களுடன் சத்தியமங்கலம், வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி  டி.கே.ரமேஷ் குமார் ,  கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  எஸ்.எம்.சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ். ரமேஷ் , கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில்நாதன்,  ஒன்றிய துணை  செயலாளர் டி. பி. அசோகன் மற்றும்  ஊர் பொதுமக்கள்       உடனிருந்தனர்.


 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .

No comments:

Post a Comment