நாகப்பட்டினம்:தமிழகத்திற்கு "நீட் விலக்கு நம் இலக்கு" என்ற பெயரில் கையெழுத்து இயக்கத்தை நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான என்.கெளதமன் கையெழுத்துயிட்டு தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இளைஞரணி, மாணவரணி,மருத்துவ அணி சார்பில் நீட் விலக்கு, நம் இலக்கு என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட திமுகவினர் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி கையெழுத்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ப.உதயகுமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் முகுந்தன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி



0 Comments