கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வேளாண் கல்லூரி அமைக்க தேங்காய் உடைத்து வழிபட்ட விவசாயிகள் சங்கத்தினர்
கரூரில் அரசு வேளாண்மை கல்லூரி திருமண மண்டபத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடங்களை கட்டுவதற்காக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி கிராம பகுதியில் ஏதுவான இடத்தினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மணவாசி மத்தியபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 140 ஏக்கர் இடம் உள்ளது. வேளாண்மை கல்லூரி அமைப்பதற்கு இந்த இடத்தினை அதிகாரியின் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் மணவாசி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைப்பதற்கு மத்தியபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் ஏதுவாக இருக்கும் என்றும், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகேவும், காவிரி ஆறு அருகேவும் இந்த இடத்திலேயே வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் இன்று கோவிலில் சூர தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
மேலும் விவசாயம் நிறைந்த இந்த பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைத்தால் மாணவர்கள் கல்வி பயில்வதிலும் விவசாயத்தினை பற்றி தெரிந்து கொள்வதிலும் உறுதுணையாக இருக்கும் என்றும் எனவே தமிழக அரசு இந்த இடத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர்
எம்.எஸ்.மோகன் ராஜ்
93857-82554
No comments