அந்தியூர் அருகே கள்ளிமடைகுட்டை பகுதியில் கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாமை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் மைக்கேல் பாளையம் ஊராட்சியில் உள்ள கள்ளிமடைகுட்டை பகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடத்திய மாபெரும் கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து கோமாரி நோய் தடுப்பூசி, பூச்சு மருந்து, குடற்புழு நீக்கம் சினைப்பரிசோதனை செய்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர்.
மேலும் இந்த முகாமில் சிறப்புரை ஆற்றிய சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கால்நடை துறை, ஆவின் பால்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்து அரசின் திட்டங்களில் கால்நடைகளுக்கான மிக முக்கியமான திட்டமான 1962 கால்நடை மருத்துவ வாகனத்தை கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஆவின் பொது மேலாளர் பழனிச்சாமி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல் , உதவி இயக்குனர் விஷ்ணுகாந்த் , மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் , ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சக்திவேல் , ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட மருத்துவர்கள் ஆவின் பணியாளர்கள் விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .
No comments