மேஷம் ராசிபலன்
உங்கள் நிதி நிலைமை இன்று பிரகாசமாகத் தெரிகிறது, விரைவில் உங்கள் சிக்கல்கள் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சி பூக்கப் போகிறது. பொதுவாக நடக்கும் விஷயங்கள் மிகவும் எளிதாகவே நடக்கும். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி பதட்டமாக இருப்பதிலிருந்து இன்று நீங்கள் வெளியேற வேண்டும். உங்கள் குடும்பத்தினர், அன்பானவர்களுடனும் கட்டிப்பிடித்துப் பேசத் தயங்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு உணர்ச்சிவசமாக ஆதரவை அளிப்பார்கள்.
ரிஷபம் ராசிபலன்
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுகிறீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களுடன் மட்டுமே போட்டியிடுகிறீர்கள். நீண்ட காலத்திற்குப் பின்னர், உங்களுக்கு மிகவும் சிறந்த நபரிடம் இருந்து இதை நீங்கள் கேட்கலாம். அவர்களிடம் பெரிய இடைவெளியைப் பற்றிக் கேள்விப்படுவது, பொறாமையைத் தூண்டக்கூடாது. அவர்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள். நீங்கள் எங்குத் தொடங்க வேண்டும் என்று நினைத்து, அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்குங்கள். ஒரு நாளைக்கு, ஒரு செயலை எடுத்து புத்திசாலித்தனமாக வேலை செய்ய உத்வேகம் பெறுங்கள்.
மிதுனம் ராசிபலன்
நீங்கள் வழக்கமாகவே, புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் இருப்பீர்கள், ஆனால், இன்று உங்கள் மனதின் செயல்பாடு தடை கொண்டதாகவும், தெளிவற்றதாகவும் தெரிகிறது. மனக்கிளர்ச்சி நிறைந்த பாதையில் விலகி இருங்கள். இல்லையெனில், இது வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து, உங்களிடமிருந்து தடம் மாறச் செய்துவிடும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சமூக தொடர்புகள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் எந்த நிதி முடிவுகளையும் முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
கடகம் ராசிபலன்
கடந்த கால அனுபவங்களிலிருந்து மீண்டெளுங்கள். ஏதாவது செய்ய முயற்சிக்கும் போது, தோல்வியுற்ற ஒரு நபர் அதை மீண்டும் செய்வதில் பயப்படுகிறார் என்பது உண்மை தான். முக்கியமான விஷயங்களில், நீங்கள் ஒருவரை நம்ப முடியவில்லை. உங்கள் ரகசியங்களைப் பாதுகாக்க, அதை உங்கள் மனதில் வைத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது நம்பிக்கையை மீட்டு எடுத்துக் கொள்ள, அறிவுசார்ந்த வார்த்தைகளைப் பேசுங்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. விரைவில் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விடத் தயாராகுங்கள்.
சிம்மம் ராசிபலன்
இன்றைய காலகட்டத்தில், நீங்கள் மனம் போனபோக்கில் வாழும் மனப்பாங்கானது, உங்களது கல்வி அல்லது பணி போன்றவற்றை நோக்கி பயணிக்கும் பாதையை குறுகலாக்கிவிடும். எப்போதும், உங்கள் நண்பர்களை நெருக்கமாக வைத்திருங்கள். இன்றைய காலகட்டத்தில், சவால்களை சந்திக்க பயப்பட வேண்டாம். கடலளவு விடாமுயற்சி செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் இலக்கை விரைவில் அடைவீர்கள். ஒருபோதும் உங்கள் நேர்மறை உணர்வினை இழக்காதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள் பின்பு, அனைத்தும் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் உற்றுநோக்குங்கள்.
கன்னி ராசிபலன்
உங்கள் வாழ்க்கையில், இந்த பணியைத் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்று நீங்கள் உணரலாம். இது உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதற்காகக் கவலை கொள்ள வேண்டாம். இந்த நிலை விரைவில் மாறும். நிகழ்காலத்திலிருந்து தப்பிக்க நீங்கள் முயல்கிறீர்கள், இது நீண்ட நாட்களுக்கு உதவாது. யதார்த்தத்தைத் தைரியமாக ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும். உங்கள் வாழ்க்கையில் சில புதிய விஷயங்களை முயற்சியுங்கள். இந்த முயற்சிகளைச் சோதிக்க இது ஒரு நல்ல நாளாக உங்களுக்கு அமையும். இந்த முயற்சிகளின் பலனைப் பற்றி கவலை கொள்ள வேண்டும், தொடர்ந்து பணியைச் செய்து கொண்டே இருங்கள்.
துலாம் ராசிபலன்
நீங்கள் மிகவும் சிறந்தவர், எனவே உங்களைப் பற்றிக் கவலைப்பட்டு மனம் தளர வேண்டாம். உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் தைரியமானவர், புத்திசாலி, திறமையானவர். நேர்மறை சொற்களைப் பேசுங்கள் மற்றும் உங்கள் முகத்தைப் புன்னகையுடன் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்கள் குறிக்கோள்கள் சற்று தெளிவில்லாமல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதனால் எந்த பிரச்சினையும் இல்லை என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை ஆக்கிரமித்துள்ள எதிர்மறை எண்ணங்களைப் போக்கத் தியானத்தில் ஈடுபடுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் நரம்புகள் அனைத்தும் இன்று உறுதியாகவும், முறுக்கேறியும் இருக்கின்றன. ஆனால், அமைதியாக இருங்கள். அதிகமாகச் செயல்பட வேண்டாம். முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். சற்று சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி நீங்கள் பயப்படும் போது, அந்த விஷயங்களை நீங்கள் வெறுக்கத் தொடங்குவீர்கள். அந்த பயத்தை உள்ளே வைத்திராமல், வெளியே காட்டி விட்டால் நல்லது. உங்கள் கவலைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது உங்கள் மனதில் உள்ள நிறைய அழுத்தங்களை வெளியேற்றி விடும்.
தனுசு ராசிபலன்
இன்று, நீங்கள் சில விஷயங்களால் மிகவும் போராடுகிறீர்கள். நல்ல நபர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். மற்றவர்களிடம் உதவி கேட்பதை, நீங்கள் தவறாக உணர வேண்டாம். நீங்கள் ஒருபோதும் சந்திக்காத நபர்களிடமிருந்து கூட உதவியைப் பெறலாம். அவர்களுக்கு உங்கள் நன்றியை தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். இன்று, குழப்பம், கோபம் போன்றவை ஏற்படுவதற்கு ஒரு பெரிய சூழ்நிலை உள்ளது. உங்களுக்கு எதுவும் சரியாக தெரியாவிட்டால், எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள்.
மகரம் ராசிபலன்
கடந்த காலங்களில், உங்கள் இதயம் பலமுறை நொறுங்கிப் போய்விட்டது. இதனால், ‘உண்மையான அன்பு’ என்னும் கருத்தை நீங்கள் இனி நம்பப்போவது இல்லை. மேலும், இதுவே உங்களுக்கு மிகவும் சர்வசாதாரணமாக பழகிப்போய்விட்டது. விரைவில், உங்கள் மனம் கவர்ந்த ஒரு நபர் உங்களை ஆக்கிரமித்துள்ள தடைகளை அகற்றி, உங்களை மிகவும் இலகுவாக உணரச்செய்வார். அப்போது, முன்பை விட பலமடங்கு பரபரப்பாக இயங்குவதை நீங்கள் உணர்வீர்கள். ஆகவே, நீங்கள் விரும்பி கேட்பதெல்லாம் யாதெனில், கடினமான சூழ்நிலைகளை கொண்ட நாட்களின் முடிவில், கொஞ்சம் அமைதியும், நிம்மதியும் தான். இச்சூழலில், உங்கள் எதிர்பார்ப்பை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக, நீங்கள் உண்மையிலேயே பேசவேண்டியிருக்கும்.
கும்பம் ராசிபலன்
புதிய எண்ணங்கள் உங்கள் வாழ்க்கை பாதையில் வந்து செல்லும். புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் நீண்டநாட்களாகத்தொடர்பில்லாத,அன்புக்குரியவர்களைத்தொடர்பு கொண்டு பேசுங்கள். கடந்த காலத்தைப்பற்றிச்சிந்திக்கவும். உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை எண்ணிப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள்.உங்களைச்சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சிலர்உங்களுக்குப்பொய்யான நம்பிக்கையை அளிப்பார்கள்.அதைக் கண்டு பயப்படாதீர்கள்.உங்களுக்குத்தேவையானதை மட்டுமே தேர்வு செய்து, அதற்கு ஏற்ப உங்கள்செயல்களைச்செய்யத் தொடங்குங்கள்.
மீனம் ராசிபலன்
உங்களது மனதில் படுவதை மற்றவர்களிடம் பேசுவது எப்போதும் புத்திசாலித்தனமாக இருக்காது. உண்மையைச் சொல்லப் போனால், நீங்கள் நேர்மையாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனாலும், அவர்களின் இதயத்தை நொறுங்கச் செய்வதற்கு பதிலாக, எளிதானதும், மனதிற்கினியதுமான வார்த்தைகளை பேசுவதை தேர்வு செய்யுங்கள். அவை அவர்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும், அது அவர்களின் நாளை நிச்சயமாக மாறும். விமர்சனம் என்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனாலும், ஒருவரை அடிக்கடி விமர்சிப்பது என்பது அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, அவர்களை காயப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment