இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டம்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமை கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை செயல்பட்டு வந்த நிலையில் ஒற்றை தலைமை சர்ச்சை எழுப்பப்பட்டு தற்போது வரை சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதில் போட்டியிடுவது தொடர்பாகவும், வேட்பாளர்களை தேர்வு செய்வது, தேர்தல் வியூகத்தை அமைப்பது, அதிமுகவில் இருந்து வெளியேறிய உறுப்பினர்களை மீண்டும் இணைப்பது, வாக்குச்சாவடி அளவில் தொண்டர்களை களப்பணி ஆற்ற செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும், கூட்டணி தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
No comments