சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று 155.42 கோடி மதிப்பீட்டில்1000 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவாவடுதுறை ஊராட்சியில் டி மேலக்கரை பகுதியில் ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக் தலைமையில்.ஒன்றிய குழு உறுப்பினர் நாகலட்சுமி முத்துராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி முன்னிலையில்.குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,அரசினர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இணைச்செயலாளர் குமரா.வைத்தியநாதன்,தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.இந்நிகழ்வில் ஏராளமான திமுக கட்சி பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tuesday, December 26, 2023
Home
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா...... தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.......
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா...... தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment