திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல் செங்கம் வனப்பகுதியை அதிகாலை 3 மணிக்கு கடந்து வந்த (GJ 08 BB-2874 பதிவு எண் கொண்ட இன்னோவா கிரிஸ்டா) கார் பசுவின் கன்று குட்டி மீது மோதியதில் கன்று குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மேலும் அங்கிருந்து தப்பி அதிவிரைவாக வந்த அந்த காரை செங்கம் காவல்துறையினர் மடக்கி பிடித்த போது கார் ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காரை சோதனை செய்தனர். சோதனை செய்த காரில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 80 மூட்டையில் பதுக்கி கடத்தி வந்த குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை கடத்தி வந்த காருடன் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment