வினையான விளையாட்டு..... கிரிக்கெட் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த எம்.எல்.ஏ...... - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 26, 2023

வினையான விளையாட்டு..... கிரிக்கெட் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த எம்.எல்.ஏ......

 


ஒடிசா மாநிலம் காலஹண்டி மாவட்டம் நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. பூபேந்தர் சிங் (வயது 72). இவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நேற்று உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்.எல்.ஏ. பூபேந்தர் சிங் கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார்.


கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தப்பின் எம்.எல்.ஏ. பூபேந்திர சிங் சற்று கிரிக்கெட் விளையாடினார். பூபேந்திர சிங் பேட்டிங் செய்தபோது எதிர்பாராத விதமாக பந்து அவரின் தலையை தாக்கியது. இதில், படுகாயமடைந்த பூபேந்திர சிங் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.


இதையடுத்து பூபேந்திர சிங்கை மீட்ட உதவியாளர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment