• Breaking News

    தந்தை பெரியாரின் நினைவு நாள்: பெரியாரின் திருவுருவ சிலைக்கு அந்தியூர் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம்   மைக்கேல் பாளையம் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள  தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு  அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் அந்தியூர் பேரூர் கழக செயலாளர்  காளிதாஸ் ,  பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் , துணைத் தலைவர் பழனிச்சாமி  ,  மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் , அந்தியூர் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ,   வார்டு செயலாளர்கள்,  திமுக நிர்வாகிகள் ,  தொண்டர்கள் ,  பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments