ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையம் துவக்கம் - MAKKAL NERAM

Breaking

Friday, December 29, 2023

ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையம் துவக்கம்


நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை  வாழவந்தி நாடு  அரசினர் மாதிரி மேல் நிலைப் பள்ளியில்  ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையம்  துவங்கப்பட்டது. விழாவில் மாதிரி பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார்  கலை பண்பாட்டுதுறை சேலம் மண்டல உதவி இயக்குனர் நீலமேகம்    ஜவகர் சிறுவர் மன்ற விரிவாக்க மையத்தை துவக்கி வைத்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வாரம் தோறும் சனி ஞாயிறு கிழமைகளில் பரதம்  ஓவியம் தற்காப்பு கலை யோகா கராத்தே சிலம்பம்  கிராமிய நடனம் போன்ற கலைகளில்  நுண்கலை பயிற்சி பெறலாம். இதில் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார் ஓவிய ஆசிரியர் அ. வெங்கடேஸ் பரதநாட்டிய ஆசிரியை ஞீமதி வெங்கடேஷ்  கிராமிய நடன ஆசிரியர் A.S.பாண்டியராஜன் ஓவிய ஆசிரியர் விஜய குமார் தற்காப்பு கலை ஆசிரியர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 ஜெ ஜெயக்குமார்  நாமக்கல் மாவட்டம் 


No comments:

Post a Comment