நம்பியூரில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திறப்பு விழா நடைபெற்றது
ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், நம்பியூர் பேருராட்சி சார்பில் முத்தமிழறிஞர்,தமிழினத் தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளில் நம்பியூர் பேரூராட்சி தலைவரும் , நம்பியூர் ஒன்றிய தி.மு.கழக செயலாளர் மெடிக்கல்.ப.செந்தில்குமார் தலைமையில் அரசு மருத்துவர் கே.ரங்கசாமி , நம்பியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகம் திறப்பு விழா நம்பியூர் பேருராட்சி தலைவர் மெடிக்கல் ப.செந்தில்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது வார்டு உறுப்பினர்கள் க.நந்தகுமார் , ராதா மகாலிங்கம் , தலைமை பொதுக்குழு உறுப்பினர் கீதா முரளி , நம்பியூர் பேரூர் கழகச் செயலாளர் எஸ்.பி.ஆனந்தகுமார் , மாவட்ட நெசவாளர் அணி தலைவர் என்.சி.சண்முகம் , மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் பா.அல்லாபிச்சை , மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தமிழ்மணி குமாரசாமி , மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எஸ்.பழனிச்சாமி , மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பாபு (எ) உதயகுமார் , மைக்.பழனிச்சாமி , கவர் மணி மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments