• Breaking News

    'ஜெய் ஸ்ரீராம்’ எனக்கூற மறுத்த முதியவர்..... தாடியில் தீ வைத்த மர்ம நபர்கள்.....


     பணத்தைப் பறித்துகொண்டு, ’ஜெய் ஸ்ரீராம்’ என கூற வேண்டுமென தன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக முதியவர் ஒருவர் புகார் கூறியுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹூசென்சாப். இவர் கடந்த 25-ம் தேதி, ஹொசப்பேட்டை நகரிலிருந்து கங்காவதி நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மர்ம நபர்கள் அவரிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, உடைந்த பீர் பாட்டிலின் துண்டுகளால் தாடியை வெட்ட முயன்றதுடன், அவரது தாடிக்கு தீ வைத்தாக கூறப்படுகிறது.



    மேலும், முதியவர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால், அவர்கள் அவரை விடாமல் 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். முதியவருக்குப் பார்வையில் பிரச்சினை இருப்பதால், அவர்களை அடையாளம் காணமுடியவில்லை எனக் கூறியுள்ளார்.


    இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் முதியவர் புகார் அளித்த நிலையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ’’பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் கீறல்களும், முகத்தில் மற்ற காயங்களும் உள்ளன. அவர் ஒரு பாட்டிலால் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. இது வகுப்புவாத காரணங்களைக் காட்டிலும் பணத்துக்கான தாக்குதலாகவே தெரிகிறது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன’’ என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    No comments