• Breaking News

    ஏழு நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மீனவர்கள்


     மிக்ஜாம் புயல் காரணமாக ஏழு நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகியது. இந்த மழையால் சென்னை உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தனர். ஏழு நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் புயல் சின்னம் நீங்கியதால் புதன்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 


    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகளும், நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதால் நேற்று (வியாழக்கிழமை)  கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகரித்திருந்தது. கடந்த ஒரு வாரமாக மீன் வரத்து குறைந்த நிலையில் நேற்று மீன்வரத்து அதிகரித்திருந்தால் பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் போதுமான அளவில் விலை போகவில்லை என்று மீனவர்கள் கூறினர்.

    No comments