மணமேல்குடியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடைவீதியில் மாரிமுத்து அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு, துள்ளிக்குதித்து, ஒன்றையொன்று முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
மேலும் இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரூபாய் 1லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
No comments