ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை சார்பில் கோவை நிழல் மையத்துடன் இணைந்து மலைவாழ் மக்களுடன் வனப்பொங்கல் விழா நிகழ்ச்சி சிக்கரசம்பாளையம் ஊராட்சி , ராமபயலூர் கலைஞர் நகர் மலையடிவாரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்தி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் எம்.எஸ். சரவணன் கலந்து கொண்டு 42 குடும்பங்களை சேர்ந்த 120 நபர்களுக்கு தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பண்டிகை முன்னிட்டு புத்தாடைகள் வேஷ்டி சட்டை புடவை சிறுவர்களுக்கான பேண்ட் சட்டை சிறுமிகளுக்கான உடைகள் மற்றும் குடும்பத்திற்கு தேவையான தலா 5 கிலோ அரிசி துவரம் பருப்பு ஒரு கிலோ கடலை ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஒரு கிலோ ஆகியவை வழங்கியும் கயிறு இழுக்கும் போட்டி இசை நாற்காலி சிறுவர்களுக்கான சாக்கு பை ஓட்டம் சிறுமிகளுக்கான லெமன் ஸ்பூன் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.
அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அசைவ உணவு வழங்கி நிறைவாக கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எம். எஸ்.சரவணன், நிழல்கள் மைய நிறுவனர் முருகன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் , சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.முருகேசன் ஆகியோர் பேசும் பொழுது மலைப்பகுதியில் ஒட்டியுள்ள பகுதிகளில் அந்நிய நபர்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் பேசினர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment