அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரம்..... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்......
தமிழ்நாடு முழுவதும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1 லட்சத்து 8 வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம் அமாவாசையில் மூலம் நட்சத்திரம் வரும் நாளில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமான் கோயில்களிலும் பெருமாள் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அந்த வகையில் நேற்று தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகின்றது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் தமிழ்நாட்டின் நாமக்கல் நகரில் நடுநாயகமாக உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனுமன் சிலை 18 அடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இந்த கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 1 லட்சத்து 8 வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வருகை தந்தனர், அவர்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதலே காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
காலை 11 மணியளவில் வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டது, பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு,1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையாக சாத்தப்பட்ட 1,00,008 வடைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது.பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில் நேற்று ஒரு நாள் மட்டும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வந்தனர்.
ஜெ ஜெயக்குமார் நாமக்கல் 9942512340
No comments