• Breaking News

    நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோட்டில் இசை திருவிழா நடைபெற்றது


    நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோட்டில் இசை திருவிழா நடைபெற்றது.மார்கழி மாதம் முழுவதும் பெரு நகரங்களில் இசை கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் திருச்செங்கோடு போன்ற சிறிய ஊர்களில் மார்கழி மாத இசை திருவிழா இந்த மாதம் முழுவதும் பல்வேறு இசைக்கலைஞர்களால் மார்கழி சங்கீத உற்சவம் என்ற பெயரில் ஜேகே கலை மன்றத்தாரால் நிறைவு நாள் நிகழ்ச்சியான இன்று திருச்செங்கோட்டில் திருவையாறு என்ற இன்னிசை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இதில் பெங்களூரு, சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இசைக் கலைஞர்கள் வருகை தந்து வயலின் தவில், கடம், கஞ்சிரா மிருதங்கம், வீணை வாய்ப்பாட்டு என பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பஞ்சாரத்தன கீர்த்தனையை வாசித்து இசை மாலைகளை கோர்த்தனர், அதனுடன் பல இசைக்கருவிகளின் சங்ககமான ஜுகல் பந்தி நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இசை பிரியர்கள் கலந்து கொண்டு  தாளம் போட்டு இசையை கேட்டனர், மேலும் ஜே கே கலை மன்றத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.திருச்செங்கோடு திருவையாறு நிகழ்ச்சியில் திருச்செங்கோடு.பகுதியைச் சேர்ந்த கிருத்திகேஷ்என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது இரண்டு கண்களையும் கட்டிக்கொண்டு கீபோர்டு வாசித்தது அனைவரையும் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியில் சங்கீத பிரியர்கள் பலரும் கலந்து கொண்டு இசையை கேட்டனர்.



    செய்தியாளர் ஜெ.ஜெயக்குமார்

    No comments