கோலாலம்பூர் ஜொகூர் பாரு சலவை நிறுவனத்தில் (Johor Bharu Laundry Company) இந்திய நாட்டு பிரஜை 11 பேருக்கு சுமார் 3 மாதத்திலிருந்து 1 வருடம் வரை வேலை செய்து வந்து உள்ளார்கள். அவர்களுடைய முதலாளி 6 மாதங்களாக அவர்களின் ஊதியத்தில் இருந்து மாதம் 500 வெள்ளி வீதம் 6 மாதம் என மொத்தம் 3000 வெள்ளியை பிடித்துக் கொண்டும். மேலும் அவர்களுடைய பாஸ்போர்ட்டை வாங்கிக் வைத்துக் கொண்டும். பணியாளர்களுக்கு தினமும் 12 மணி நேரம் வேலை அதையும் விட அதிகமாக வேலை செய்ய வைத்து விட்டு அதற்கான ஊதியம் கொடுக்காமலும். மாதத்தில் ஒரு நாள் கூட விடுமுறை இன்றி அவர்களுக்கு ஒப்பந்தம், பஞ்ச் கார்டு, பேஸ்லிப், வங்கி அறிக்கை ( Agreement,Punch card,Payslip, Bank Statement) எதுவும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.அதன் அடிப்படையில் அங்கிருந்து வெளியேறிய இந்திய நாட்டு பிரஜைகள் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்து உள்ளனர். புகார் செய்யப்பட்டு 3 வாரங்களாக உறங்க இடம் இல்லாமலும் மற்றும் உணவு இல்லாமல் பறிதவிர்த்து வந்த நிலையில். கோவில்களில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு வந்ததாகவும். அது மட்டுமல்லாமல் மலேசிய உலக மனிதநேய டாக்டர் த. கமலநாதன் அவர்களை தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது கஷ்டங்களை கூறி உள்ளனர்.தகவல் அறிந்த கமலநாதன் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட நபர்களுடன் பேசி புகார் மனுவை பெற்றுக் கொண்டதுடன். உடனடியாக தொலைபேசி மூலம் முதலாளியை தொடர்பு கொண்டு பேசிய போது அவர்களுடைய பாதிக்கப்பட்ட நபர்களின் பாஸ்போட் எதுவும் என்னிடம் இல்லை என்றும். அவர்களுடைய ஊதியம் அனைத்தும் கொடுக்கப்பட்டது என்று கூறினார்.பின் எந்த விதமான பர்மிட்( permit )காசும் பிடிக்கவில்லை என்றும் கூறியதை தொடர்ந்து.கமலநாதன் SUN WAY காவல் நிலையத்தில் தொழிலாளர்களின் பிரச்சனையை பற்றி புகார் செய்தார். இந்த பிரச்சனையை உடனடியாக தொழிலாளர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும்படி மற்றும் குடிநுலைவு துறையின் ( EMIGRATION) மூலியமாகவும் புகார் செய்ய போவதாக டாக்டர் கமலநாதன் தெரிவித்து உள்ளார்.மேலும் இது குறித்து பேசிய கமலநாதன் மலேசிய நாட்டிற்கு முறையாக பணிக்கு வர வேண்டும் என்றும்,தற்போது விசா இன்றி மலேசிய நாட்டிற்குள் சுற்றுலாவிற்கு சென்று வரலாம் என்ற அறிவிப்பை வெளிநாட்டவர்கள் முறையாக பயன்படுத்தி செல்ல வேண்டும் என்றும். சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் வந்து வீதி முறைகளை மீறி யாரும் பணி செய்ய வேண்டாம் என்றும் மலேசிய நாட்டில் இது போன்ற இன்னல்களுக்கு உள்ளாகி உள்ள நபர்கள் என்னை தொடர்பு கொண்டு முறையான விதிமுறைகளை பின்பற்றி தங்களது நாடுகளுக்கு செல்ல எவ்வித உதவிகள் தேவை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளவும் என +60 16-974 4404 மலேசிய உலக மனித உரிமை கழகத் தலைவர் த.கமலநாதன் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments:
Post a Comment