திருவண்ணாமலை மாவட்டம் தெற்கு காங்கிரஸ் தலைவராகவும்,அகில இந்திய காங்கிரஸ் மாநில பஞ்சாயத்து ராஜ் சங்க அமைப்பாளராகவும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் தலைவராகவும் செங்கம் ஜி. குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தோஷமான நிகழ்ச்சியை வெற்றி விழாவாக கட்சி நிர்வாகிகளும், தலைவர்களும் கட்சித் தொண்டர்களும் மிக விமர்சையாக கொண்டாடினர். மேலும் மேள தாளங்களோடு கட்சி நிர்வாக அலுவலகத்தில் இருந்து செங்கம் புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்து அங்கு அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் உருவ சிலைக்கு மாலைகளை அணிவித்து அவர் நன்றிகளை தெரிவித்தார். பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.பிறகு கட்சித் தொண்டர்கள் மொட்டை அடித்தனர் , காங்கிரஸ் செங்கம் நகரத் தலைவர் காந்தி சார்பாக 501 சூரைத் தேங்காய் உடைத்து இந்த நிகழ்ச்சியை மிக மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
செங்கம் செய்தியாளர் S. சஞ்சீவ்
No comments:
Post a Comment