பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 22 ஆமாண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, February 24, 2024

பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 22 ஆமாண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது


புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22ம் ஆண்டு விழா நடைபெற்றது.பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இருபத்தி இரண்டாமாண்டு ஆண்டு விழாவிற்கு கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் இலாஹி ஜான் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் முன்னிலை வகித்தார்.

வட்டார வள மேற்பார்வையாளர் ( பொறுப்பு )சிவக்குமார் பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் அல்போன்ஸா வரவேற்புரை ஆற்றினார். இடைநிலை ஆசிரியர் விஜயசுதா  ஆண்டறிக்கையை வாசித்தார்.பேரூராட்சி கவுன்சிலர் ராஜா, கல்வியாளர்,ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் கருப்பையா, பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், நகரச்செயலாளர் அழகப்பன்,பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சீதா ,ஆசிரியப் பயிற்றுநர் கவிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறையாக தொடங்கிய ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவிகளின் கலை நிகழ்ச்சியினை இடைநிலை ஆசிரியர் முத்துக்கனி தொகுத்து வழங்கினார்.இப்பள்ளி ஆண்டு விழாவினை இடைநிலை ஆசிரியர்கள் அமுதா,பாலசுப்ரமணியன் ஒருங்கிணைப்பு செய்தனர்.இந்நிகழ்வில் மு.சு.மூக்கையா பாண்டியன்,புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் அருண்குமார்,ஜெய் பழனியப்பன், PWD வெங்கடேசன், சங்கர் மெமோரியல் டிரஸ்ட் குழுவினர்,கலைச்செல்வி சுரேஷ், காவலர் தவசுராமன்,சண்முகப்பிரியா ராஜா, நந்தினி அச்சகம்,முத்து கிருஷ்ண பிள்ளை அறக்கட்டளையினர்,நடன இயக்குநர் தவசி மற்றும் அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மையம்,இல்லம் தேடி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கலந்து சிறப்பித்த அனைவரும் ஆசிரியர் அன்னாள் ஜெய நிர்மலா நன்றி கூறினார்.


இரா.பாஸ்கர் செய்தியாளர்


No comments:

Post a Comment