சேத்திரபாலபுரம் சப்த கன்னியம்மன் ஆலய மாசி மகம் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, February 24, 2024

சேத்திரபாலபுரம் சப்த கன்னியம்மன் ஆலய மாசி மகம் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு


சேத்திரபாலபுரம்;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் சப்த கன்னியம்மன் ஆலய மாசி மகம் திருவிழா நடைபெற்றது காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் பால்குடங்களுடன் வான வேடிக்கை மேளதாளா வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சப்த கன்னியம்மனுக்கு பாலாபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment