மணமேல்குடி அருகே பாலதண்டாயுதபாணி ஆலய மாசிமக திருவிழா
மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் பாலதண்டாயுதபாணி கோவிலில் மாசி மக திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் உள்ள கோடிவிநாயகர், பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 23ஆம் தேதி சாமி வீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாசிமகத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, பறவைகாவடி, செடல்காவடி, அக்னிகாவடி எடுத்து, தீயில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். திருவிழாவை முன்னிட்டு மதியம் அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து இரவில் கலை நிகழ்ச்சிகளும், புராதான நாடகங்களும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணமும், திங்கட்கிழமை அதிகாலை தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கம்மாபட்டினம் கிராமத்தார்கள் சிறப்பாக செய்தனர். இதேபோன்று அறந்தாங்கி அருகே குலமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி கிளை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
No comments