நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் திருக்குவளை அடுத்த கொளப்பாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் முக்கூடல் விழா,விளையாட்டு விழா,பசுமை விழா,இலக்கிய மன்ற நிறைவு விழா,பள்ளியின் ஆண்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ. ஜெய்குமாரி தலைமையிலும், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. தமிழ்ச்செல்வன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில இணைச்செயலர் தலைமையாசிரியர் சங்க மாவட்டத் தலைவர் இள .தொல்காப்பியன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில இணைச்செயலர் ஞானசேகரன் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் ஆகியோர் முன்னிலையிலும் தலைஞாயிறு ஒன்றியக் குழு தலைவர் தமிழரசி சிறப்பு விருந்தினராகவும்,பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியும், பட்டதாரி ஆசிரியர் ஜி பாரதி நிகழ்ச்சி தொகுத்து வழங்கியும் ஆசிரியை எம் வேம்பு ஆண்டறிக்கை வாசித்து ஐய்பெரும் விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்ஆண்டு விழா முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டி,கலை நிகழ்ச்சிகள் ஆடல்,பாடல்கள், எட்டாம் வகுப்பு மாணவி ர.தர்ஷினி பறவை மற்றும் விலங்குகளின் மிமிக்ரி அசத்தல், எட்டாம் வகுப்பு மாணவி க.சோபிகா 1330 திருக்குறளையும் ஒப்புவித்தது சபையில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆத்தியது.மாணவிக்கு தலைஞாயிறு வட்டார கல்வி அலுவலர் ரூபாய் ஆயிரம் பாராட்டி வழங்கினார். மாணவர்கள் தமிழக கலை பண்பாட்டு நடனமான பறை, கரகம், காவடி, மற்றும் விவசாயிகளின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.
பத்ரகாளியம்மன் வேடமிட்ட மாணவன் தயாநிதிக்கு பாராட்டு குவிந்தது.மேடையில் மாணவ மாணவிகள் திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும் தமிழக அரசால் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டியில் ஒன்றியம், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் பெற்றோராசியர் கழக தலைவர் இரா. காளிதாசன், கொளப்பாடு ஊராட்சி மன்ற தலைவர் என். அசோக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலாஜி, வார்டு உறுப்பினர் நாகவள்ளி, ஊராட்சி செயலர் அசோகன்,ஆதமங்கலம் தலைமை ஆசிரியர் சரவணன், ஆதமங்கலம் தமிழ் ஆசிரியர் ஜி.நாகராஜன்,தலைமை ஆசிரியர் ஓய்வு அண்ணாமலை, மணக்குடி வட்டார வள மையம் பழனிவேல், கொளப்பாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவண தமிழன், பசுமை படை பொறுப்பாளர் பிரியா, கூட்டுறவு வங்கி கருப்பையன், வலிவலம் காவல் ஆய்வாளர் சுமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி எல்.சசிகலா சத்துணவு அமைப்பாளர் மாணவர்களை பாராட்டி உரையாற்றினார்கள் ஐம்பெறும் விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,பெற்றோர்கள்,ஆசிரிய, ஆசிரியைகள்,மற்றும் சத்துணவு ஊழியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆய்வக உதவியாளர் ஆர் உதய ராஜா நன்றியுரை நல்க விழா நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி. க
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments:
Post a Comment