மேஷம் ராசிபலன்
நல்லிணக்கம் இன்று உங்களுக்கு நல்ல நன்மைகளை உண்டாக்கும். கோபத்தையும், விரக்தியையும் உங்கள் மனதிலேயே அடக்கி வைக்காதீர்கள். மன்னிப்பு கேட்பது உங்களை நல்லமனநிலைக்குக்கொண்டு வரும். எப்போதும் ஆரோக்கியமானஉணவுகளைச் சாப்பிட வேண்டுமா?அந்தபழக்கத்தை இப்போதே தொடங்குங்கள். அது உங்கள் வாழ்க்கை முறையுடன் ஒன்றியதாக இருக்க வேண்டும். தியானம் அல்லது யோகா போன்றவை கூட உங்களுக்கு நல்ல மனஅமைதியைக்கொடுக்கும். இதுபோன்ற மன அமைதி கொடுக்கும் செயல்களில் ஈடுபட இன்று சிறிது நேரம் செலவிடுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் உண்மையிலேயே முதலிடத்தைப் பெற விரும்பினால், உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும். நீங்கள் நினைப்பதை விட நீங்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர், உங்கள் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் விரைவில் நல்ல பலனை உண்டாக்கும். உங்கள் முடிவுகள் மிக அருகிலேயே இருக்கின்றன. இன்னும் சில மணி நேரங்கள் காத்திருங்கள். நீங்கள் இன்று மனச்சோர்வடைந்திருக்கலாம். உங்கள் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் மெதுவாக இருந்தாலும், நிச்சயமாகப் பலனளிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்த கசப்பான அனுபவத்தால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.
மிதுனம் ராசிபலன்
சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.
கடகம் ராசிபலன்
இன்று, உங்களது குடும்பம் தான் உங்கள் மனதில் முதலிடம் வகிக்கிறது. எனவே, நீங்கள் அவர்களின் சந்தோஷங்களை பேணி வளர்பதற்காக நேரம் ஒதுக்குங்கள். உங்களது கடின உழைப்பு உங்களுக்கு பெரும்புகழைப் பெற்றுத்தரும். மேலும், மற்றவர்கள் உங்களின் உண்மையான மதிப்பை உணரத் தொடங்குவார்கள். இன்று, நீங்கள் சற்று பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் மனத்தைக் காத்துக்கொள்ளுங்கள். உங்களது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிக்காட்ட வேண்டாம். உங்களின் நேர்மையினைப் பற்றி குறைகூறும் நபர்களை கண்டு கொள்ளாதீர்கள். ஆனால், சத்தியத்தை மட்டும் இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்.
சிம்மம் ராசிபலன்
நல்லவர்களாக இருப்பதற்குப் பதிலாக உண்மையானவராக இருங்கள். உண்மையான உலகில், நல்லவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. கடந்த காலங்களில், உங்களது நேர்மையான தன்மையைப் பயன்படுத்தி சிலர் உங்களை ஏமாற்றியதுடன், காயப்படுத்தியுள்ளனர். பிடிவாதமாக இருப்பது எப்போதும் ஒரு நல்ல விஷயம் அல்ல. உங்கள் வழிகளில் உள்ள தவறுகளை ஒரு சிலர் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளனர். அவற்றில் சிலவற்றை நீங்கள் சரி செய்து விட்டீர்கள், சிலவற்றைச் சரி செய்யாமல் விட்டு விட்டிருக்கலாம். எனவே உங்கள் இழப்புகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அந்த இழப்புகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
கன்னி ராசிபலன்
உங்கள் உள் மனம் புதிகாக ஒன்றைத் தேடுகிறது. இது உங்கள் மனதில் உள்ளதா? இல்லையென்றால், மற்றவரின் மனதில் உள்ளவற்றை சரியான வழியில் தெரிவிப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். தவறான புரிதல்களை நீக்கி அனைவரும் ஒரே மாதிரியாக சிந்திக்க வேண்டும்.
துலாம் ராசிபலன்
உங்களுக்குக்கிடைத்த நல்ல விஷயங்களைப்பற்றிச்சிந்தியுங்கள். உங்களுக்குள் உள்ள சிறந்தவரை வெளியே கொண்டு வர உங்கள் உள்ளார்ந்த திறமைகளைப் பயன்படுத்துங்கள். இன்று உங்கள் உண்மையான திறனை வெளிப்படுத்தவும். நீ நினைப்பதை விட, நீங்கள் பலமானவர். வேலை மற்றும் வீடு இரண்டிற்கும் பயனளிக்கும் சில நல்ல யோசனைகள் உங்களிடம் இருப்பதால், இன்று உங்கள் மனதைகட்டுப்பாட்டுக்குள்வைத்திருங்கள். உங்கள் இனிமையான இயல்பைப் பயன்படுத்திக் கொண்டவர்களைப் பற்றி நீங்கள் சொல்வது சரிதான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் ஒருதிட்டத்தைக்கொண்டு வர வேண்டிய நேரம் இது!
விருச்சிகம் ராசிபலன்
இன்று, உங்களது வாழ்க்கையில் நடந்துள்ள அனைத்து நல்ல விஷயங்களுக்காகவும் நன்றியோடு இருங்கள். உங்களுக்குள்ளேயும், மற்றவர்களோடும் சமாதானமாக இருங்கள். ஒழுக்கமோடு இருங்கள். மற்றவர்கள் உங்களை எந்த அளவிற்கு காயப்படுத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டாலும், அவர்களை மன்னிக்கத் தயாராகுங்கள். ஆன்மீக உணர்வோடு இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். மேலும், இந்த அனுபவத்தின் முடிவிலே நீங்கள் முழுத்திருப்தி அடைவீர்கள். உங்களது ஆன்மீக நலனுக்கு மன்னிப்பு அவசியம். எனவே, நீங்கள் உங்களுக்குள்ளும், மற்றவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
தனுசு ராசிபலன்
புதிய எண்ணங்கள் உங்கள் வாழ்க்கை பாதையில் வந்து செல்லும். புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் நீண்டநாட்களாகத்தொடர்பில்லாத,அன்புக்குரியவர்களைத்தொடர்பு கொண்டு பேசுங்கள். கடந்த காலத்தைப்பற்றிச்சிந்திக்கவும். உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை எண்ணிப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள்.உங்களைச்சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சிலர்உங்களுக்குப்பொய்யான நம்பிக்கையை அளிப்பார்கள்.அதைக் கண்டு பயப்படாதீர்கள்.உங்களுக்குத்தேவையானதை மட்டுமே தேர்வு செய்து, அதற்கு ஏற்ப உங்கள்செயல்களைச்செய்யத் தொடங்குங்கள்.
மகரம் ராசிபலன்
இன்று நீங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறீர்கள். அது உங்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காது! எங்கள் உண்மையான மற்றும் புதிய யோசனைகளை வெளிப்படுத்துவதில் நீங்கள் நல்லவர் இருந்தாலும், மறுப்புக்கும் தயாராக இருங்கள். உங்கள் பொறுப்புகளை நீங்கள் அதிக முடிவு சார்ந்த முறையில் எடுத்துக்கொள்கிறீர்கள்என்பதைக்காலம் நிரூபிக்கும்.அதே நிலையிலேயே இருங்கள். அனைவருடனும்சமாதானமாகச்செல்லுங்கள்.
கும்பம் ராசிபலன்
உங்களது தனித்திறன்களை அப்படியே அமைதியாக வைத்திருக்க வேண்டாம் . உங்களது படைப்பாற்றலைப் வெளிக்கொணர்ந்து, அவற்றை உலகுக்குக் காட்டுங்கள். உங்களது புத்தாக்கக் கருத்துக்களால் உங்களை நீங்களே ஆச்சரியப்படுத்தி இருக்கிறீர்கள். இது உங்களது பணியிலும், சமூக தொடர்பிலும் கூட, சாதகமான நிலையினை ஏற்படுத்த முடியும். இன்று, உங்களது லட்சியமும், உந்துதலும் உயர்ந்ததாக இருக்கும். அன்பினது சின்னஞ்சிறிய வெளிப்பாடுகளால், நீங்கள் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை உங்களது உறவினர்களும், நண்பர்களும் தெரிவிப்பார்கள்.
மீனம் ராசிபலன்
உங்களிடம் ஒரு அற்புதமான குணம் உள்ளது. அது யாதெனில், இருண்ட அறையிலிருக்கும் ஒரு மனிதரின் முகத்தில் கூட புன்னகையை உங்களால் வரவழைக்க இயலும். இன்று, இதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். உங்களது வார்த்தைகளுக்கு சக்தி இருக்கிறது. நிறைய சமயங்களில், உங்களது வார்த்தைகளின் உண்மையான தாக்கத்தை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். ஆனால், உங்களது நன்மைக்காக இதை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்பதை சமீபத்திய சம்பாஷணை உணர்த்தியுள்ளது. கவலையான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது, உங்களை மிகவும் இலகுவாக உணரச் செய்யும். ஆனாலும், உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு யார் நம்பகமானவர் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment